2011-01-01

தென்னிந்தியமொழி யொவ்வொன்றிலும் இசைமொழிபெயர்ப்பு

பல ஆண்டுகளாக கர்ணாடகவிசை கேட்டுகளித்துவருகிறேன். அவ்விசையின் மும்முகம் சுரம், சந்து மற்றும் பொருளெனத் திகழ்கின்றன. பாட்டுக்கள் பெரும்பாலும் தெலுங்கிலும் வடமொழியிலும் அமைந்ததனால் பாட்டின் பொருள் மற்றதமிழர்போல் நானும் அறியாதுள்ளேன்.
என்னைப்போல் இம்மாதிரி பல தமிழர் இருப்பர் என தோன்றுகிறது. இவ்வாறே மலையாளத்தவள் கன்னடப்பாட்டின் பொருள் காண்பதிலும் தெலுங்கன் தமிழ்ப்பாட்டறிவதிலும் சிரமம் அறிவர் எனும் எண்ணுகிறேன்.
இந்நாள் இணையத்தில் கர்ணாடகவிசைப் பொருள் விளக்குவதற்காக இணைப்புகள் sahityam.net, rasikas.org, karnatik.com, medieval.org என்று பற்பல பிறந்திருக்கின்றன. அவ்விணைப்பனைத்துமே ஆங்கிலமொழிமூலம் விளக்க முயல்கின்றன.
பழந்தமிழ் பிள்ளைகளான தென்னிந்தியமொழிகள் ஓரொன்றிற்கு ஆழமான உறவுள்ளவை ஆகும். இந்நிலையில் கன்னடப் பாட்டொன்று அதனிலிடம்பெறும் சொற்களையேக் கொண்டு மிக எளிதில் தமிழில் பெயர்க்க இயலும். அவ்வாறு மொழிபெயர்ப்பு தமிழருக்கு ஆங்கிலமொழிபெயர்ப்பைக் காட்டிலும் எளிதில் எட்டும்.
எடுத்துக்காட்டாக, “வான நீர் முங்க முங்கையில்” என வரி பிரபல தெலுங்குப்பாட்டொன்றில் இடம்பெருகிறது. அவ்வாறே “போதித்த சன்மார்க்க-வசனம் போங்குசெய்து சாதித்தானே”, “சந்தடியென்று மறந்தாயோ! இங்கில்லையோ! எதற்கு தயை வராதுடா? இராமச்சந்திரா!”, “அக்கரையுள்ள அழகிரிரங்கனின் … இராணி” என மறுமொழிப்பாட்டின் எளிமையான தமிழாக்கம் பலவும் தோன்றுகின்றன. இவையனைத்திலுமே ஆங்கிலமூலத்தைக் காட்டிலும் தமிழ்மொழிய்யாக்கமே சுலபம் என தெரிகிறது.
எனவே, மறுமொழிப்பாட்டின் பொருள் அறியவேண்டுவோர் தமிழராயிருப்பின், தமிழிலாக்கிப் பயில்வீர். அப்பயிற்சியினால் ஏளிதில் கற்பதோடல்லாமல் அப்பொருளை எளிதில் மறவாதிருப்பீர் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment