2018-05-06

மல்லிப்பூ வகை

தமிழகத்தில் விளங்கும் மல்லி வகைகள் பற்பல. அவை அனைத்துமே இறைவழிபாட்டிலும் தலையழகிற்கும் நறுமணத்திற்கும் பயன்படுகின்றன. மணம், மென்மை, வெண்மை ஆகியவற்றினால் மல்லிப்பூ எத்தனையோ உவமைகளில் ஆளாகும். பழமென்றால் தமிழில் எவ்வாறு வாழையோ அவ்வாறே பூவென்றால் மல்லிகை. மல்லிகை தமிழர் பூவென்றே சொல்லலாம்.

அப்பூவின் வகைகள் தமிழில் மட்டுமே அறிந்தேன். வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உயிரியல் இருசொற்பெயரீட்டிலும் பெயர்கள் அறியாது ஆராய்ந்தேன். அகராதி மற்றும் இணையத்தின் கிடைத்த சில பெயர்கள் மேல் உள்ளன.

தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் ஆங்கிலப்பெயர் இருசொற்பெயர்
பிச்சி, சாதிமல்லி jāti, mālatī Royal jasmine Jasminum grandiflorum
நித்தியமல்லி, பெருமல்லி ? Brazilian jasmine Jasminum fluminense
குண்டுமல்லி navamallikā Arabian jasmine Jasminum sambac
முல்லை, உச்சிமல்லி yūthikā ? Jasminum auriculatum
கத்தூரிமல்லி kunda Indian jasmine Jasminum multiflorum
காட்டுமல்லி vanamallikā Wild jasmine Jasminum angustiflorum
இருவாய்ச்சி ? ? ?

பட்டியலில் குற்றம் குறைகள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment