Personal website + blog of Ambarish Sridharanarayanan.
பல ஆண்டாக கருணாடக இசய் கேட்டு களித்துவருகிறேன். அவ்விசயின் மும்முகம் சுரம், சந்து மற்றும் பொருளெனத் திகழ்கின்றன. பாட்டுகள் பெரும்பாலும் தெலுங்கிலும் வடமொழியிலும் அமய்ந்ததனால் பாட்டின் பொருள் மற்றதமிழர்போல் நானும் அறியாதுள்ளேன்.
என்னய்ப்போல் இம்மாதிரி பல தமிழர் இருப்பர். இவ்வாறே மலயாளத்தவள் கன்னடப்பாட்டின் பொருள் காண்பதிலும் தெலுங்கன் தமிழ்ப்பாட்டறிவதிலும் சிரமம் அறிவர் எனும் எண்ணுகிறேன்.
இந்நாள் இணயத்தில் கருணாடகவிசய்ப் பொருள் விளக்குவதற்காக தளங்கள் rasikas.org, karnatik.com, medieval.org என்று பற்பல பிறந்திருக்கின்றன. அவ்விணய்த்தளமனய்த்துமே ஆங்கிலமொழிமூலம் விளக்க முயல்கின்றன.
பழந்தமிழ்ப் பிள்ளய்களான திராவிடமொழிகள் ஓரொன்றிற்கு ஆழமான உறவுள்ளவய் ஆகும். இந்நிலயில் கன்னடப் பாட்டொன்று அதனிலிடம்பெறும் சொற்களயேக் கொண்டு மிக எளிதில் தமிழில் பெயர்க்க இயலும். அவ்வாறு மொழிபெயர்ப்பு தமிழருக்கு ஆங்கிலமொழிபெயர்ப்பய்க் காட்டிலும் எளிதில் எட்டும்.
எடுத்துக்காட்டாக, “வான நீர் முங்க முங்கயில்” என வரி பிரபல தெலுங்குப்பாட்டொன்றில் இடம்பெருகிறது. அவ்வாறே “போதித்த சன்மார்க்கவசனம் போங்குசெய்து சாதித்தானே”, “சந்தடியென்று மறந்தாயோ! இங்கில்லயோ! எதற்கு தயய் வராதடா? சீராமச்சந்திரா!” என மறுமொழிப்பாட்டின் எளிமயான தமிழாக்கம் பலவும் தோன்றுகின்றன. இவயெல்லாவற்றிலுமே ஆங்கிலமூலத்தய்க் காட்டிலும் தமிழ்மொழியாக்கமே சுலபமல்லவா?
மறுமொழிப்பாட்டின் பொருள் அறியவேண்டுவோர் தமிழராயிருப்பின், தமிழிலாக்கிப் பயில்வீர். அப்பயிற்சியினால் ஏளிதில் கற்பதோடல்லாமல் அப்பொருளய் எளிதில் மறவாதுமிருப்பீர்.