Personal website + blog of Ambarish Sridharanarayanan.
இலக்கணம் பயிலும்பொழுது எட்டு வேற்றுமயுருபுகள் அதாவது அய் ஆல் ஓடு உடன் முதலியன பயின்றேன். சில ஆண்டாக வடமொழி கற்கிறேன். வடமொழியிலும் வேற்றுமயுருபுகள் உள்ளன. மொழியய் விளக்க இலக்கணம் எனில், வடமொழியில் பெயர்ச்சொற்களய் விளக்க வேற்றுமயுருபுகள் இன்றியமயாதவய். உரயிலோ செய்யுளிலோ பெயர்ச்சொல்லது முடிவில் வரும் பிற்சேர்க்கய்கள் எட்டே. அவ்வெட்டது மூலம் பெயர்ச்சொல் எல்லாமே எட்டாக வேறுபடும். இப்பிற்சேர்க்கய்தான் வேறுபாட்ட உருபகளென கருதப்படுகின்றன.
அம்மொழி சொல்லச்சொல்ல, தமிழய்ப்பற்றித் தோன்றியது. வேற்றுமய்கள் எவ்வளவு வடமொழியிற்கு பொருந்தியவயோ, அவ்வளவு தமிழிற்கு பொருந்தாதவயென தோன்றிற்று. சிறிது ஆராய்ந்தேன். என்னவென்றால், தமிழ் இலக்கணம் எழுதிய அகத்தியர் முதலானோர் அனய்வரும் வடமொழி இலக்கணம் அறிந்தோர். அவ்விலக்கணத்தின் விதிமுறய் கண்டு அவற்றய் தமிழிலக்கணத்துள் திணித்துள்ளனர். இதனய் ஆங்கிலத்தில் பற்பல எடுத்துக்காட்டுடனும் சான்றுடனும் அருமயாக கூறுகிறார் ஆரொலுறு சிப்புமன் முனய்வர்.