Personal website + blog of Ambarish Sridharanarayanan.
வயது நாற்பது ஆகப் போகின்றது. இப்பருவத்தார் தமது இளங்காலமே பொற்காலம், ஆனால் சமீபகாலமோ இழிவுகாலம் என்றெல்லாம் சொல்வர். எனக்கும் தமிழ்த் திரயிசயய்ப் பற்றி அவ்வாறு தோன்றிற்று. விசுவகுணாதருசத்தில் வரும் கிருசானுவய்ப்போல், ஏன் எனது வயதுக்காரர் பலரய்ப்போலும் அடியேனும் மனநிறய்விழந்து எல்லாவற்றிலும் குற்றம் குறய்வு பார்ப்பவனாகிவிட்டேனோ என பீதி கண்டேன்.
அகமுடயாளிடம் கேட்டேன். பெற்றோரயும் கேட்டேன். தொலய்க்காட்சி மற்றும் யூட்டியூபில் தேடினேன். இணயத்தில் திரய்ப்படப்பாடல்கள் திறனாய்வு செய்யும் தளங்களில் ஆராய்ந்தேன். சில தகவல்கள் கிடய்த்தன.
முதலில், திரும்பத்திரும்ப விமரிசிக்கபடும் பாட்டுகள் திருவாளர்கள் விசுவநாதன் மற்றும் இராமமூர்த்தி பாட்டுகள், திரு இளயராசா பாட்டுகள், திரு இரகுமானின் ஆரம்பகாலப் பாட்டுகள், அவ்வப்போது திரு மகாதேவன் பாட்டுகள். பொது ஊழி ௨௲க்கு பின் வந்த பாடல்களய்க் காணவே காணோம். இரண்டாவது, சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகளில் இடம்பெறும் பாடல்கள் கீழ்க் கூறினவயே. மூன்றாவதாக, சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு எப்பாடல்கள் மக்கள் மனதில் நின்றனவோ அப்பாடல்களே இப்பொழுதும் நிலய் நாடுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமீபகாலத்துப் பாடல்கள் சனங்கள் மனங்களய்க்கவரவே செய்யும். ஆயினும் ஒரு பத்து வருடத்திற்குப் பிறகும் நிலய் நாடும் பாடல்கள் பொது ஊழி சுமார் ௲௯௱௬௰இலிருந்து ௨௲வரய் வந்த பாடல்களே. இரகுமானின் பாடல்களில் கூட, தொடக்கத்தில் வெளிவந்த பாட்டுகள் போல் பிறகு வந்த பாட்டுகள் திகழா.
ஆக, சுமார் நாற்பதாண்டுகளிற்குத் தமிழ்த் திரயுலகில் இசய்ப்பொற்காலமாக இருந்ததென்று, அக்காலம் நசிந்த பிறகு இப்பொழுதுதான் நாம் அறிகிறோம். கீழ்க்கண்ட காரணங்களினால் பீதி நீங்கினேன், தாபமுற்றேன். எனினும், பொற்காலம் இறந்தபின்பும் அக்காலத்துப் பாடல்கள் இறவா நிற்குமென ஒருவாறு ஆறினேன்.