Ambarish Sridharanarayanan

Personal website + blog of Ambarish Sridharanarayanan.

கறிகாய் வகய்

ambarishfood

சிறு வயதில் பற்பல கறிகாய்கள் தினசரி உண்டு வந்தேன். அசலூரில் வசிக்க தன்னூர்க்காய்கறிகள் மறப்பேனோவென அஞ்சி இப்பட்டியல் எழுதிகிறேன்.

தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் ஆங்கிலப்பெயர் இருசொற்பெயர்
சேப்பங்கிழங்கு 𑌕𑌚𑍁𑌃 Taro Colocasia esculenta
சேனய்க்கிழங்கு, கருணய்க்கிழங்கு 𑌸𑍂𑌰𑌣𑌮𑍍 Elephant‐foot yam Amorphophallus paeoniifolius
கருணய்க்கிழங்கு, பிடிகருணய் 𑌆𑌲𑍁𑌃 Lesser yam Dioscorea esculenta
சிறுகிழங்கு Native potato, country potato Coleus rotundifolius
சருக்கரய்வள்ளிக்கிழங்கு, வற்றாளய்க்கிழங்கு 𑌕𑌿𑌟𑌿𑌃 Sweet potato Ipomoea batatas
மரவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு Cassava Manihot esculenta
அவரய்க்காய் 𑌨𑌿𑌷𑍍𑌪𑌾𑌵𑌃 Hyacinth bean Lablab purpureus
கொத்தவரய்க்காய் 𑌗𑍋𑌰𑌾𑌣𑍀 Cluster bean Cyamopsis tetragonoloba
கத்தரிக்காய், வழுதுணய் 𑌵𑍃𑌨𑍍𑌤𑌾𑌕𑌃 Brinjal, eggplant, aubergine Solanum melongena
காராமணி 𑌮𑌾𑌧𑍍𑌵𑍀𑌕𑌾 Cowpea, black‐eyed pea Vigna unguiculata
தம்பட்டங்காய் 𑌖𑌡𑍍𑌗𑌶𑌿𑌮𑍍𑌬𑍀 Sword bean Canavalia gladiata
வெண்டய்க்காய் 𑌭𑌿𑌣𑍍𑌡𑌃 Lady’s finger, okra Abelmoschus esculentus,
முள்ளங்கி 𑌮𑍁𑌲𑌕𑌮𑍍 Radish Raphanus raphanistrum sativus
பலாக்கொட்டய் 𑌪𑌨𑌸𑌃 Jackfruit Artocarpus heterophyllus
பூசணிக்காய் 𑌕𑍂𑌷𑍍𑌮𑌾𑌣𑍍𑌡𑌃 Ash gourd, winter melon Benincasa hispida
சுரய்க்காய் 𑌅𑌲𑌾𑌬𑍁𑌃 Bottle gourd, calabash Lagenaria siceraria
வெள்ளரிக்காய் 𑌤𑍍𑌰𑌪𑍁𑌷𑍀 Cucumber Cucumis sativus
நாட்டு வெள்ளரிக்காய் 𑌕𑌰𑍍𑌕𑌟𑍀 Snake cucumber Cucumis melo var. flexuosus
தோசய்க்காய் Field marrow Cucumis melo subsp. agrestis var. conomon
மிதுக்காய், மிதுக்கங்காய், சுக்கங்காய் Country cucumber Cucumis melo var. melo
பீர்க்கங்காய் 𑌕𑍋𑌶𑌾𑌤𑌕𑍀 Ridged gourd Luffa acutangula
புடலங்காய் 𑌬𑍀𑌜𑌗𑌰𑍍𑌭𑌃 Snake gourd Trichosanthes cucumerina
கம்புப்புடலய் 𑌪𑌟𑍋𑌲𑌃 Pointed gourd Trichosanthes dioica
கொவ்வய்க்காய், கோவய்க்காய் 𑌬𑌿𑌮𑍍𑌬𑌾 Ivy gourd Coccinia grandis
பாகற்காய் 𑌕𑌾𑌰𑌵𑍇𑌲𑍍𑌲𑌃 Bitter gourd, bitter melon Momordica charantia
வெங்காயம், வெண்காயம், நீருள்ளி 𑌪𑌲𑌾𑌣𑍍𑌡𑍁𑌃 Onion Allium cepa
பூண்டு, வெள்ளுள்ளி 𑌲𑌶𑍁𑌨𑌮𑍍 Garlic Allium sativum
மஞ்சள் முள்ளங்கி 𑌗𑌾𑌰𑍍𑌜𑌰𑌃 Carrot Daucus carota subsp. sativus
கோசு, கோவிசு 𑌕𑌪𑌿𑌶𑌾𑌕𑌮𑍍 Cabbage Brassica oleracea var. capitata
நூல்கோல் Kohlrabi Brassica oleracea var. gongylodes
பூக்கோசு Cauliflower Brassica oleracea var. botrytis
செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு 𑌪𑌾𑌲𑌙𑍍𑌕𑌃 Beetroot Beta vulgaris
பட்டாணி 𑌕𑌲𑌾𑌯𑌃 Pease Pisum sativum
முருங்கய்க்காய் 𑌶𑌿𑌗𑍍𑌰𑍁𑌃 Drumstick Moringa oleifera
வாழய்க்காய், வாழய்ப்பூ, வாழய்த்தண்டு 𑌕𑌦𑌲𑍀 Cooking banana Musa × paradisiaca
சுண்டய்க்காய் 𑌬𑍃𑌹𑌤𑍀 Turkey berry Solanum torvum
மணற்றக்காளி 𑌕𑌾𑌕𑌮𑌾𑌚𑍀 Black nightshade Solanum nigrum
நெல்லிக்காய் 𑌆𑌮𑌲𑌕𑍀 Emblic myrobalan Phyllanthus emblica
மாங்காய் 𑌆𑌮𑍍𑌰𑌮𑍍 Mango Mangifera indica
எலுமிச்சங்காய் 𑌜𑌮𑍍𑌭𑍀𑌰𑌮𑍍 Lemon Citrus × limon
நார்த்தங்காய் 𑌨𑌾𑌰𑌙𑍍𑌗𑌮𑍍 Citron Citrus medica
சாத்துக்குடி 𑌮𑌧𑍁𑌪𑌾𑌕𑌮𑍍 Sweet lime Citrus limetta
தோடம்பழம் 𑌕𑌮𑌲𑌾 Orange Citrus × sinensis

சீமயினும் சிற்சில கறிகாய்கள் உண்டு வந்தேன். அவய் மேல்வருமாறு.

தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் ஆங்கிலப்பெயர் இருசொற்பெயர்
உருளய்க்கிழங்கு Potato Solanum tuberosum
தக்காளி Tomato Solanum lycopersicum
மிளகாய் 𑌮𑌰𑍀𑌚𑌿𑌕𑌾 Green chilli Capsicum annuum var. longum
குடய்மிளகாய் 𑌮𑌹𑌾𑌮𑌰𑍀𑌚𑌿𑌕𑌾 Capsicum Capsicum annuum var. annuum
பரங்கிக்காய், அரசாணிக்காய் Pumpkin Cucurbita pepo
சீமய்க்கத்திரிக்காய் Chayote Sechium edule
பச்சயவரய்க்காய் 𑌶𑌿𑌮𑍍𑌬𑍀 Beans Phaseolus vulgaris

பட்டியலில் குற்றம் குறய்கள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.